மிளகாய் இறால் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/2 கிலோ
2. பூண்டு - 8 பல்
3. பச்சை மிளகாய் - 6
4. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
5. வெங்காயம் - 100 கிராம்
6. கறிவேப்பிலை - சிறிது
7. நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. அதில் பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கிப் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு மிளகுத்தூள் சேர்த்து வதக்கிச் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து வதக்கவும்.
5. உப்பு சேர்த்து தீயைக் குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.