வஞ்சிரம் மீன் வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
2. சோம்பு - 1 தேக்கரண்டி
3. பூண்டு - 7 பல்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. புளி - நெல்லிக்காய் அளவு
6. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
7. வெங்காயம் - 1 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
3. வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
4. மிக்சியில் சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து அரைக்கவும்.
5. கரைத்த புளியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு பாத்திரத்தில் மீனைப் போட்டு, அதனுடன் அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
7. தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், அதில்க் எண்ணெய் ஊற்றி மீனைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
குறிப்பு: தோசைக் கல்லில் வறுத்தால் தான் மசாலா மீனுடன் சேர்ந்து இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.