மட்டன் கட்லட்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 250 கிராம் (சிறிதாக வெட்டி வைக்கவும்)
2. ரஸ்க்- 5 எண்ணம்
3. எலுமிச்சம்பழம்- பாதி
4. டால்டா- 200 கிராம்
5. உருளைக்கிழங்கு- 250 கிராம்
6. முட்டை-2 எண்ணம்
7. வெள்ளைப் பூண்டு- 5 பல்
8. இஞ்சி- சிறிது
9. பெரிய வெங்காயம்- 5
10. மைதா மாவு- 1தேக்கரண்டி
11. மிளகுத்தூள்- 1தேக்கரண்டி
12. வற்றல் தூள்- 2 தேக்கரண்டி
13. கருவேப்பிலை, மல்லி இலை- தேவைக்கேற்ப (சிறிதாக நறுக்க வேண்டும்)
14. கறிமசால் பொடி- தேவைக்கேற்ப.அல்லது பட்டை சோம்பு- 1தேக்கரண்டி(பொடி செய்யவும்)
செய்முறை:
1. உருளைக் கிழங்கை வேக வைத்து உரித்து, உப்பு போட்டு உதிர்த்து வைக்கவும்.
2. ஆட்டுக்கறியை எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும்.
3. பின்பு தண்ணீர் இல்லாமல் வதக்கி ஆட்டி வற்றல்தூள், கறி மசால் பொடி, உருளைக் கிழங்கு கல்ந்து நன்றாக பிசையவும்.
4. வெங்காயம், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஒரு கரண்டியில் வதக்கி அதையும் சேர்த்துப் பிசையவும்.
5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு சிறிது போட்டு நன்றாகக் கலக்கி வைக்கவும்.
6. ரஸ்க்கை தனியே ஒரு தட்டில் தூள் செய்து வைக்கவும்.
7. வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் கட்லட்டை முட்டையில் தோய்த்து ரஸ்க்கில் புரட்டி டால்டாவில் போட்டு பொறித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.