ஆட்டுக்கறிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. வெங்காயம் - 50 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் -3 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. பூண்டு - 5 பல்
9. - உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க
11. தேங்காய்த் துருவல் -2 மேசைக்கரண்டி
12. கசகசா - 1 தேக்கரண்டி
13. சோம்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க
14. பிரியாணி இலை - 2 எண்ணம்
15. கிராம்பு - 2 எண்ணம்
16. சோம்பு = 1 தேக்கரண்டி
17. பட்டை - சிறுதுண்டு
18. கருவேப்பிலை -சிறிது.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தேங்காய்த் துருவல், சோம்பு, கசகசாவைச் போட்டு வறுத்து ஆறிய பின் அரைத்து வைக்கவும்.
4. கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, சிறிது நறுக்கிய வெங்காயம், பூண்டு, மட்டன் சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் மல்லித்தூள், மிளகய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.
6. கறி வெந்ததும் கறி, வேகவைத்த நீர் ஆகியவற்றைத் தனிதனியாக எடுத்து வைக்கவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிசப் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
8. தாளிசத்துடன் இஞ்சிப்பூண்டு விழுது, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கறிவேகவைத்த நீர் சேர்த்து மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும்.
10. குழம்பு கெட்டியானதும் வேகவைத்த கறியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.