ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 250 கிராம்
2. இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
4. மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைத்துப் பின்னர் சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஆட்டுக்கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பிசறி முக்கால் வேக்காட்டில் வேகவைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைப் போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.
4. துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பொன்னிறமாக வரும்வரை வறுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.