மட்டன் மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 500 கிராம்
2. பெரிய வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 150 கிராம்
4. மிளகாய் - 30 கிராம்
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
7. கரம் மசால் தூள் - 1/2 தேக்கரண்டி
8. தயிர் - 100 மி.லி
9. இஞ்சி - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
12. மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
1. சிறு சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியைச் சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் கலந்து பிசைந்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் இறைச்சியைப் போட்டு, எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
3. தனியாத்தூள், கரம்மசால் பொடி, தயிர் ஆகியவற்றைக் சேர்க்கவும்.
4. கறியை நன்றாகத் தண்ணீர் விடாமல் வேக வைக்கவும்.
5. வெங்காயம், மிளகாய், தக்காளி, மல்லித்தழை, இஞ்சி இவற்றைப் பொடியாக நறுக்கவும். இவையனைத்தையும் ஒன்றாகப் போட்டு சிறிது எண்ணெய்யில் தாளித்து வைக்கவும்.
6. இந்தத் தாளிசத்தை வெந்து கொண்டிருக்கும் கறியில் ஊற்றிக் கடைசியில் மல்லித்தழையை மேலாகப் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.