மட்டன் சாப்ஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
5. சோம்புத்தூள் -1தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
7. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. தேங்காய்ப்பால் - 1 கப்
9. எண்ணெய் - தேவையான அளவு
10. கரம்மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைக் கழுவித் தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர்த்து, அனைத்தையும் போட்டு கிளறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், ஊற வைத்த ஆட்டுக்கறியைக் கொட்டி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
3. ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி ஆட்டுக்கறி நிறம் மாறி வரும் போது, சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறிப் பாத்திரத்தை மூடி வைத்து மிதமான நெருப்பில் வேக விடவும்.
4. வெந்து கொண்டிருக்கும் கறியைக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. பாத்திரத்தில் மசாலா ஒட்டாமல் ஆட்டுக்கறி தனித்தனியாக மசாலா ஒட்டி வரும் போது இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.