சிம்பிள் மட்டன்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 500 கிராம்
2. வெங்காயம் - 200 கிராம்
3. மிளகாய் - 50 கிராம்
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. நல்லெண்ணெய் - சிறிது
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. சிறு சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியைச் சுத்தம் செய்து சிறிது வேக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
3. வெங்காயம், மிளகாயை நறுக்கிப் போடவும். அத்துடன் வேகவைத்த கறியையும் சேர்த்து வதக்கவும்.
4. உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அந்தத் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்.
குறிப்பு: மிளகுத்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.