மட்டன் சுக்கா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
வேகவைக்க:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக)
2. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
9. எண்ணெய் - சிறிது
தாளிக்க:
10. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
11. சிறிய வெங்காயம் -150 கிராம்
12. சோம்பு - 1 தேக்கரண்டி
13. தக்காளி - 1 எண்ணம்
14. கடுகு - சிறிது
15. கறிவேப்பிலை - சிறிது
16. மல்லித்தழை - சிறிது
17. உப்பு - தேவையான அளவு
18. மிளகு - 1/2 தேக்கரண்டி
அலங்கரிக்க:
19. பெரிய வெங்காயம் - 1 எண்ணம் (வட்டமாக நறுக்கவும்)
20. தக்காளி - 2 எண்ணம் (வட்டமாக நறுக்கவும்)
21. மல்லித்தழை - சிறிது
22. எலுமிச்சம் பழம் - சிறு துண்டுகள்.
செய்முறை:
1. வேகவைக்கக் கொடுத்திருக்கும் அனைத்துப் பொருள்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கி நன்கு வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2. அடி கணமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு மற்றும் சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
3. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் போடவும்.
4. பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வெங்காயம் வதங்கும் வரை கிளறவும்.
5. அதனுடன் தக்காளியைச் சேர்த்துக் கிளறவும்.
6. பிறகு வேகவைத்த கறியை பாத்திரத்தில் போட்டுக் கிளற வேண்டும்.
7. வேகவைத்த கறியுடன் இருக்கும் தண்ணீரையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்க்கவும்.
8. இடித்த மிளகுப் பொடியை சேர்க்கவும்.
9. கறி கெட்டிப் பதம் வரும் வரை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
10. தண்ணீர் வற்றி மசாலாக் கறியுடன் சேர்ந்த பிறகு, பொன் நிறம் வரும் வரை கிளற வேண்டும்.
11. கடைசியாக நறுக்கி வைத்த மல்லிதழை சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கவும்.
12. இறக்கி வைத்த கறியை அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.