ஆட்டு இரத்தப் பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு இரத்தம் -1 கப்
2. வெங்காயம் -1 எண்ணம்
3. பச்சை மிளகாய் -3 எண்ணம்
4. எண்ணெய்-தேவையான அளவு
5. தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
1.வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்
2. ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு, கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
4. வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தைப் போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.
5. கடைசியாக அதில் தேங்காய் துருவலைப் போட்டுக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: உப்பு, தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.