மட்டன் கொழுப்புக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மட்டன் நெஞ்செழும்பு - 100 கிராம்
2. மட்டன் கொழுப்பு - 100 கிராம்
3. மட்டன் ஈரல் - 50 கிராம்
4. மட்டன் சுவரொட்டி - 100 கிராம்
5. சின்ன வெங்காயம் - 200 கிராம்
6. தக்காளி - 2 எண்ணம்
7. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
10. பட்டை - 1 துண்டு
11. கிராம்பு - 4 எண்ணம்
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
அரைக்க:
15. தேங்காய் - 1/2 மூடி
16. சோம்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
3. தாளிசத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அதன் பிறகு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. இத்துடன் அரைக்கக் கொடுத்திருக்கும் தேங்காய், சோம்பு ஆகியவற்றை அரைத்து அதன் விழுதைச் சேர்த்து மூடி மிதமான நெருப்பில் வைத்து வேக வைக்கவும்.
7. இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.