ஈரல் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஈரல் – 500 கிராம்
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
4. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
5. மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. சீரகம் – 1 தேக்கரண்டி
8. நல்லெண்ணை – தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. ஆட்டு ஈரலை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
3. சீரகம், மஞ்சள் தூள், ஆட்டு ஈரல், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
4. அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
5. ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாகக் கிளறவும்.
6. மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு மிளகுத்தூள் தூவி இலேசாகத் தண்ணீர் விட்டு, மிதமான நெருப்பில் வேகவிடவும்.
7. அவ்வப்போது கரண்டி போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
8. எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
9. அதன் மீது மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.