ஆட்டுத் தலைக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுத் தலை – 1 எண்ணம் (கடையிலேயே வெட்டிச் சுத்தம் செய்து வாங்கி வரவும்)
2. பட்டை - 2 எண்ணம்
3. ஏலம் - 2 எண்ணம்
4. கிராம்பு – 2 எண்ணம்
5. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
6. மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8. வெங்காயம் – 5 எண்ணம்
9. இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
10. பச்சமிளகாய் – 4 எண்ணம்
11. தக்காளி – 4 எண்ணம்
12. கத்திரிக்காய் – 1/4 கிலோ
13. மல்லித் தழை - சிறிது
14. புதினா – சிறிது
15. தேங்காய் - 1/2 முறி (தேங்காய்ப் பாலாக எடுத்து வைக்கவும்)
16. எண்ணெய் – 5 தேக்கரண்டி
17. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டுத் தலையிலிருக்கும் நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கிற வெண்ணீரில் போட்டு தோலைப் பிரித்தெடுக்கவும்.
2. ஆட்டுத் தலைக்கறியினை நன்றாகக் கழுவி எடுத்து உப்பு, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டுக் குக்கரில் வேக வைக்கவும். (தலைக்கறி வெந்ததும் அதை மேலாக ஊற்றவும், குக்கரின் அடியில் எலும்பு துணுக்குகள் தங்கியிருக்கும் அதை வெளியில் தூக்கிப் போடவும்)
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
6. அதில் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறவும்.
7. கடைசியில் அதில் கத்தரிக்காய்த் துண்டுகள் போட்டு, தேங்காய்ப் பால் ஊற்றிக் கொதிக்க விடவும்.
8. கறி, கத்தரிக்காய் வெந்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.