செட்டிநாடு எலும்புக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு எலும்பு – 1/2 கிலோ
2. துவரம் பருப்பு – 100 கிராம்
3. உருளைக்கிழங்கு – 150 கிராம்
4. கத்திரிக்காய் – 150 கிராம்
5. முருங்கைக்காய் – 2 எண்ணம்
6. சின்ன வெங்காயம் – 100 கிராம்
7. பெரிய வெங்காயம் – 100 கிராம்
8. தக்காளி – 1/4 கிலோ
9. பச்சைமிளகாய் – 10 எண்ணம்
10. மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
11. சீரகம் – 1 தேக்கரண்டி
12. மிளகு – 1 தேக்கரண்டி
13.சோம்பு – 1 தேக்கரண்டி
14. பட்டை – 4 எண்ணம்
15. பிரியாணி-இலை – 1 எண்ணம்
16. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
17. சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி
18. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு குக்கரில் ஆட்டு எலும்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை மஞ்சள்தூள், சிறிது உப்பு, மற்றும் ஐந்து கப் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், அதில் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய், மிளகாய் வற்றல் என அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. அதனுடன் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
4. அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
5. காய் நன்றாக வதங்கியதும், அந்தக் கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றித் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
6. நன்றாக வெந்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.