மட்டன் சுக்கா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. எலும்பில்லாத ஆட்டுக்கறி – 200 கிராம்
2. சின்ன வெங்காயம் – 200 கிராம்
3. இஞ்சி - 25 கிராம்
4. பூண்டு – 25 கிராம்
5. சீரகத்தூள் – 40 கிராம்
6. மிளகாய்த்தூள் – 20 கிராம்
7. காய்ந்த மிளகாய் – 2 எண்ணம்
8. மல்லித்தழை - சிறிது
9. கறிவேப்பிலை – சிறிது
10. நல்லெண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தையும், ஆட்டுக்கறியையும் சிறியசிறியத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர், அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் ஆட்டுக்கறியையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கிச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
5. நன்றாக வெந்ததும் சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்துக் கலக்கி, மேலாக மல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.