ஜிஞ்சர் மட்டன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டிறைச்சி – 250 கிராம்
2. சின்னவெங்காயம் – 100 கிராம்
3. தக்காளி – 50 கிராம்
4. இஞ்சி – 25 கிராம்
5. மாங்காய் – 25 கிராம்
6. இஞ்சிப்பூண்டு விழுது – 25 கிராம்
7. மிளகாய்த்தூள் – 15 கிராம்
8. மல்லித்தூள் – 30 கிராம்
9. மஞ்சள்தூள் – 10 கிராம்
10. சீரகம் – 15 கிராம்
11. நல்லெண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை – சிறிது
செய்முறை:
1. ஆட்டிறைச்சியைப் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைச் சிறிதாகவும், மாங்காயை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும்.
3. குக்கரில் மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
4. தனியே ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகம் போட்டு வதக்கவும்.
5. பின்னர், அதில் மாங்காய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
6. அதனுடன் வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து வதக்கி, மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.