ஆட்டு ஈரல் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஈரல் - 1/2 கிலோ
2. சோம்பு - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. கல்பாசி - 2 எண்ணம்
5. பட்டை - 1 எண்ணம்
6. அன்னாசிப்பூ - 1 எண்ணம்
7. கிராம்பு - 1 எண்ணம்
8. ஏலக்காய் - 3 எண்ணம்
9. சின்ன வெங்காயம் - 200 கிராம்
10. மிளகாய் - 2 எண்ணம்
11. இஞ்சி - 1 துண்டு
12. பூண்டு - 20 பற்கள்
13. தக்காளி - 3 எண்ணம்
14. உப்பு - தேவையான அளவு
15. கறிவேப்பிலை - சிறிதளவு
16. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
17. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
18. கறிமசால் தூள் - 1 தேக்கரண்டி
19. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
20. கடலை எண்ணெய் - தேவையான அளவு
21. மல்லித்தழை - சிறிதளவு
22. புதினா - சிறிதளவு
செய்முறை:
1. ஈரலைச் சிறிது நேரம் மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, சீரகம், போட்டு நன்றாக பொரியவிட வேண்டும்.
3. பின்னர் அதில் கல்பாசி, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக மணம் வரும் அளவுக்கு வதக்கிக் கொள்ளவும்.
4. அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து அதனுடன் சேர்த்துப் பச்சை வாடை நீங்கும் வரை வததக்கவும்.
6. பின் நறுக்கிய தக்காளியை போட்டு நன்றாகச் சுருள வதக்கிக் கொள்ளவும்.
7. கறிவேப்பிலை, புதினா இலை போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.
8. மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கறிமசால், உப்பு போட்டுக் கிளறி விடவும்.
9. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் ஈரலைப் போட்டு மசாலா சேரும்படி கிளறி விடுங்கள்.
10. பிறகு, அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள், கொதித்து வரும்பொழுது ஈரல் நன்றாக வெந்து மணம் வரும் போது இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.