இரத்தம் வதக்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1.ஆட்டு இரத்தம் -200 கிராம்
2. எண்ணெய் -2 ஸ்பூன்
3. மிளகாய் -6 எண்ணம்
4. மஞ்சள் தூள -1 தேக்கரண்டி
5. தேங்காய் -1/2 மூடி
6. வெங்காயம் - 50 கிராம்
7. உப்பு -தேவையான அளவு
செய்முறை:
1. இரத்தத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து, பின்னர் தண்ணீரை மட்டும் வடித்து விட வேண்டும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை நன்றாக இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும்.
4. இறக்கும் போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.
குறிப்பு: இட்லியுடன் சேர்த்துச் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.