மட்டன் வருவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மட்டன் (எலும்பில்லாதது) - 1/2 கிலோ
2. சீரகம் - 1/2 தேக்கரண்டி
3. சோம்பு - 1/2 தேக்கரண்டி
4. வெங்காயம் - 3 எண்ணம்
5. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
6. பட்டை - 1 துண்டு
7. கிராம்பு - 3 எண்ணம்
8. ஏலக்காய்த் தூள் - சிறிது
9. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
10. மிளகுத் தூள் -3 தேக்கரண்டி
11. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கறியைச் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் வரை வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்தில் மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அதனுடன் வேகவைத்த கறியை மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.