மட்டன் மிளகுக் கறி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக் கறி - 1/4 கிலோ
2. வெங்காயம் - 15 எண்ணம்
3. பூண்டு - 15 பல்
4. இஞ்சி - 1 துண்டு
5. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
6. மிளகுத் தூள் – 2 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி
8. மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
9. சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
10. சோம்பு -1 மேசைக்கரண்டி
11. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
12. இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
13. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
14. மல்லித்தழை - சிறிது
15. கறிவேப்பில்லை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஆட்டுக்கறியை இலேசான சுடு நீரில் போட்டு, சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
3. மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
4. ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக் கறியை அரை உப்பு, மஞ்சள் ஆகியவற்றுடன் இஞ்சி துண்டைத் தட்டிச் சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதில் ஆட்டுக்கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு தாளித்து, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
7. பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
8. அடுப்பை சிறிய தீயில் வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத் தூள், உப்பு எல்லாம் சேர்த்துக் கிளறவும்.
9. பின்னர் அதில் வேகவைத்த கறியைச் சேர்க்கவும்.
10. பின்னர் தேங்காய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
11. எண்ணெய் பிரிந்து வ்ரும் போது அடுப்பிலிருந்து இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.