மட்டன் பிரட்டல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளாட்டுக் கறி - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் -1 கப்
3. இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி
4. பூண்டு 1/4 கப்
5. பச்சை மிளகாய் -16 எண்ணம்
6. பட்டை - சிறிய துண்டு
7. கிராம்பு - 6 எண்ணம்
8. சோம்பு - 1/2 தேக்கரண்டி
9. குருமிளகு - 1 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. கல் உப்பு - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து அம்மிக்கல்லில் விழுதாக அரைத்து வைக்கவும்.
2. பச்சை மிளகாயை அம்மிக்கல்லில் நசுக்கி வைக்கவும்.
3. பூண்டை உரித்து அம்மிக்கல்லில் நசுக்கி வைக்கவும்.
4. குறுமிளகினை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணய் விட்டுக் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. அதில் ஆட்டிறைச்சிக் கொழுப்பைச் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
8. பின்னர் அதில் இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. பிறகு அதில், நசுக்கிய பூண்டையும் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
10. பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
11. அதன் பிறகு, விழுதாக அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
12. அதில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
13. பின்னர், அதில் நன்றாகச் சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியைச் சேர்த்து, தேவையான அளவு கல் உப்பைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
14. பிறகு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டுக் கறி வேகும் வரை அடுப்பை சிறு தீயிலே வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
15. கறி நன்றாக வெந்த உடன் அதில் அரைத்து வைத்துள்ள குரு மிளகு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
16. அவ்வப்போது எண்ணய் விட்டு, நன்றாக சிறு தீயிலேயே வேக விட வேண்டும்.
17. கறி நன்றாக வெந்து, உப்பு மற்றும் காரம் நன்றாகச் சேர்ந்த நிலையில், பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.