ஆட்டு ஈரல் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு ஈரல் -1/4 கிலோ
2. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
4. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
5. சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1கப்
6. கறிவேப்பிலை - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. ஆட்டு ஈரலை நன்கு கழுவிச் சுத்தமாக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய ஈரலுடன் மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து கைகளால் பிசைந்து, பிறகு அதனை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை மெல்லிய தீயில் வேக விடவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சீரகம் சேர்த்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வதங்கிய வெங்காயத்துடன் வேகவைத்த ஈரல், குக்கரில் ஈரலுடன் கிடைத்த நீரையும் சேர்த்து வேகவிடவும்.
5. நீர் வற்றி வரும் போது, காரம், உப்பு பார்த்துத் தேவையெனில் சேர்க்கவும்.
6. வெந்த ஈரலுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.