மூளைப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு மூளை - 2 எண்ணம்
2. மிளகாய்த்தூள் – 1 1 / 2 தேக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் – 1தேக்கரண்டி
5. வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கப்
6. சோம்பு - 1/2 தேக்கரண்டி
7. எண்ணைய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டு மூளையின் மேற்பகுதியைத் தண்ணீரில் மெதுவாகக் கழுவி, ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
2. மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆற வைத்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மெதுவாகக் கிளறி விடவும் .
4. வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாகச் சிவந்தவுடன் வேக வைத்த மூளை மசாலாவைச் சேர்த்து மிக மெதுவாகக் கிளறி இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.