ஈரல் சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு ஈரல் – 200 கிராம்
2. மிளகு – 1 தேக்கரண்டி
3. சீரகம் – 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
5. இஞ்சி – சிறிய துண்டு
6. பூண்டு பல் – 8 எண்ணம்
7. வெங்காயம் – 1 எண்ணம்
8. தக்காளி – 1 எண்ணம்
9. உப்பு – தேவையான அளவு
10. கருவேப்பிலை – தேவையான அளவு
11. மல்லித்தழை – தேவையான அளவு
செய்முறை:
1. ஈரலை நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. மிக்சியில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
4. ஒரு குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள ஈரல் அத்துடன் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி அடுப்பில் வைக்கவும்.
5. குக்கரில் 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.
6. பிறகு அனைவர்க்கும் ஒரு டம்ளரில் சூப், சிறிய தட்டில் ஈரல் வைத்துக் கொடுக்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.