மட்டன் குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக் கறி – ½ கிலோ
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
5. மல்லித்தழை – சிறிதளவு
6. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
9. கரம் மசாலாத் தூள்– 1 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
11. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
12. எண்ணெய் – தேவையான அளவு
13. பட்டை – சிறிது
14. ஏலம் – 2 எண்ணம்
15. கிராம்பு – 2 எண்ணம்
16. தேங்காய்த் துருவல் – ½ கப்
17. கசகசா – 1 ஸ்பூன்
18. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
19. உப்பு - தேவையான அளவு
20. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. ஆட்டுக்கறியை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. தேங்காய்த் துருவல், கசகசா, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
3. குக்கரில் 5 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து, அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கறியைச் சேர்த்துக் கொள்ளவும்.
7. அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
8. மசாலாக்களின் பச்சை வாசனை நீங்கியதும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய், முந்திரிப்பருப்பு விழுது, உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
9. குக்கரை மூடி 5 விசில் வரை வேகவிட்டு இறக்கி, அதில் சிறிதளவு மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.