ஆட்டு மூளை வதக்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மூளை - 1 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மூளையை நன்கு கழுவி, சுத்தம் செய்து வைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், சோம்பைப் போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும்.
4. பிறகு மூளையைப் போட்டு வதக்கவும்.
5. அதனுடன் அனைத்து வகையான தூள்களையும் போட்டு நன்கு வதக்கவும்.
6. வதக்கும் போதே, தோசைக் கரண்டியால் தேவையான துண்டுகள் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.