மட்டன் சுக்காக் குழம்பு
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. பல்லாரி - 1 எண்ணம்
3. தக்காளி - 3 எண்ணம்
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 2 தேக்கரண்டி
6. மிளகு - 1 தேக்கரண்டி
7. எண்ணெய் - தேவையான அளவு
8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைகரண்டி
9. தயிர் - 2 மேசைகரண்டி
10. மிளஜ்காய்த்தூள் - 2 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
12. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
13. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
14. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
16. புதினா இலை - 1/2 கோப்பை
17. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை கொறகொறப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அதில் தக்காளி சேர்த்து, எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு வதக்கவும்.
5. ஆட்டுக்கறி, தயிர், மிளகாயத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு, புதினா இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 4 விசில் வரை வேகவைக்கவும்.
6. அதன் பின்பு, 2 அல்லது 3 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
7. வாணலியில் 3 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி வேக வைத்ததை அதில் சேர்த்து தண்ணீரை நன்கு வற்ற வைக்கவும்.
8. பின் அரைத்து வைத்ததைச் சேர்த்துக் கிளறவும்.
9. அத்துடன் கரம் மசாலாத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.