ஆட்டு மூளை மிளகு கிரேவி
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு மூளை - 2 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் = 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. சீரகம் - 1 தேக்கரண்டி
10. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
11. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். சீரகம் சேர்த்து நன்கு பொரிந்த பிறகு, சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
2. வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
4. அதில் மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
5. பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
6. கிரேவி தயாரான பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள மூளையைச் சேர்த்து மூளையை வேக விடவும்.
7. மூளையின் ஒரு புறம் நன்கு வெந்த பிறகு மறுபுறம் மெதுவாக திருப்பி விடவும்.
8. கிரேவி பதம் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.