ஆட்டுக்கறிக் குழம்பு
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (எலும்புடன் கூடிய இறைச்சி) – 1/2 கிலோ
2. தக்காளி – 2 எண்ணம்
3. வெங்காயம் – 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
5. மிளகாய்த் தூள் – 1 கரண்டி
6. தயிர் – 1 கோப்பை
7. கரம் மசாலாத் தூள் – 1 மேசைக்கரண்டி
8. சீரகம் – 1 மேசைக்கரண்டி
9. எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
10. பட்டை மற்றும் கிராம்புப் பொடி – 1 தேக்கரண்டி
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
13. மல்லித்தழை (நறுக்கியது) – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. முதலில் ஆட்டுக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
2. தக்காளி, வெங்காயத்தைத் தனித்தனியாக விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ளவும்.
4. அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு, 5 முதல் 7 நிமிடம் வதக்கவும்.
5. அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
6. தீயை குறைவில் வைத்து, ஆட்டுக்கறியைப் போட்டு 10 நிமிடம் வரை வதக்கி விட வேண்டும்.
7. பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.