உப்பு ஆட்டுக்கறி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
4. பூண்டு - 15 பற்கள்
5. தக்காளி - 50 கிராம்
6. மஞ்சள் தூள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஆட்டுக்கறியை நன்கு கழுவி, சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டு, தக்காளி என்று அனைத்தையும் நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றலைச் சேர்க்கவும்.
4. பின் அதில் பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பின் அதில் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
6. பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
7. நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும்.
8. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
9. தேவைக்கு ஏற்பத் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
10. பின்பு ஆட்டுக்கறியை மூடி போட்டு வைத்து நன்கு வேக வைக்கவும்.
11. ஆட்டுக்கறியில் இருக்கும் தண்ணீர் குறைந்து நன்கு சுருள வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
12. தண்ணீர் முழுமையாகக் குறைந்ததும், எடுத்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.