மட்டன், உருளைக் கிழங்கு குருமா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. உருளைக்கிழங்கு - 200 கிராம்
5. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
7. பட்டை - 2 துண்டு
8. கிராம்பு - 2 எண்ணம்
9. மஞ்சள் தூள் - சிறிது
10. தேங்காய்த் துருவல் - சிறிது
11. இஞ்சி, பூண்டு விழுது - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - 100 மி.லி
14. மல்லித்தழை - சிறிது
15. புதினா - சிறிது
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும்.
3. அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
4. அதில் மட்டன், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
7. உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் பெரிய அளவில் துண்டாகப் போட்டுச் சேர்க்கவும்.
8. பிறகு, அதனுடன் தேங்காய்த் துண்டுகளை விழுதாக அரைத்துச் சேர்க்கவும்.
9. குக்கரை மூடி நான்கு விசில் வரை விட்டு வேக வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.