ஆட்டுத் தலைக்கறி பிரட்டல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுத் தலைக்கறி - 1 எண்ணம்
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. இஞ்சிப் பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
5. உப்பு - தேவையானஅளவு
தாளிப்பதற்கு:
6. தேங்காய் எண்ணெய் - 1/4 கோப்பை
7. சின்ன வெங்காயம் - 50 கிராம்
8. பூண்டு - 4 பற்கள்
9. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
10. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
11. சோம்பு - 1/2 தேக்கரண்டி
12. சீரகம் - 1/4 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. தலைக்கறியைச் சுத்தமாகக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துக் கைகளால் பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு குக்கரில் மசாலா தடவிய தலைக்கறி சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
3. சோம்பு, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ளவும்.
4. அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டைத் தோலுடன் தட்டிச் சேர்த்து வதக்கவும்.
5. அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
6. அதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி விட்டு, தலைக் கறித் துண்டுகளை தண்ணீர் இல்லாமல் எடுத்து வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தைச் சேர்த்துப் பிரட்டவும்.
7. கடைசியாக மிளகுத் தூள், சோம்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்துப் பிரட்டி விடவும்.
8. கடைசியாக, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.