தேங்காய்ப் பால்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய தேங்காய் - 2 எண்ணம் (4கப் தேங்காய் பாலுக்கு)
2. அரிசி - 2 தேக்கரண்டி
3. சர்க்கரை - 1 கப்
4. ஏலக்காய் - 7 எண்ணம்
5. பச்சைக் கற்பூரம் - 1/2 சிட்டிகை
செய்முறை:
1. தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
2. கல்லுரல் அல்லது மிக்ஸியை நன்றாகக் கழுவித் துடைத்து, துருவிய தேங்காயையும் அரிசியையும் போட்டுச் சேர்த்து நன்றாக அரைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் பிழியவும்.
3. முழுவதையும் பிழிந்துவிட்டு, அந்தத் தேங்காயை மறுபடியும் சுமார் 1 கப் நீர் விட்டு, நன்றாக அரைத்துப் பிழியவும்.
4. முதலில் பிழிந்து வைத்துக் கொள்ளப்பட்ட பாலையும், இரண்டாவதாக பிழிந்த பாலையும், ஒரு மெல்லிய வெள்ளைத் துணியிலோ அல்லது சல்லடையிலோ வடிகட்டவும்.
5. தேங்காய்த் துருவலோடு சர்க்கரையும் மறுபடியும் கொஞ்சமாக நீர் வீட்டு அரைத்து, துணியில் போட்டு, ஒட்டப் பிழிந்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
6. பாலைக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிட்டு, நல்ல சூடு வந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விட்டு, கொதி வரும் சமயங்களில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் இவற்றைப் போடவும்.
குறிப்பு: கொதித்துவிட்டால், பால் முறிந்து போய்விடும். நன்றாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே, நன்கு காய்ந்து, கொதி வரும் சமயம் பார்த்து இறக்கிவிட வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.