கடலைப்பருப்புப் பாயசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - 1 கப்
2. வெல்லம் - 1 கப்
3. நெய் - 1 மேசைக்கரண்டி
4. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
5. முந்திரிப் பருப்பு - 12 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. பால் - 1/4 கப்
செய்முறை:
1. ஒரு குக்கரில் நெய் சேர்த்துச் சூடானதும் கடலைப் பருப்பைப்போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
3. பிறகு கடலைப்பருப்பை ஒன்றிரண்டாகக் கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
5. அதில் வெந்த கடலைப்பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. பால், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.