அவல் - வாழைப்பழப் பாயசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. வாழைப்பழம் - 1
3. பேரீச்சம் பழம் - 6 எண்ணம்
4. வெல்லம் - 100 கிராம்
5. தேங்காய்ப்பால் - 1 கப்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
7. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
8. நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. வாழைப்பழம், பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. வாணலியில் நெய்விட்டு வாழைப்பழத் துண்டுகள், பேரீச்சம் பழத்துண்டுகள், உலர் திராட்சை சேர்த்து வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
3. அதே வாணலியில் அவலைச் சேர்த்து லேசாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.
4. அதனுடன் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால், நெய்யில் வறுத்த பழங்கள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.