ஜவ்வரிசி - அவல் பாயசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி – 1/2 கப்
2. கெட்டி அவல் – 1 கப்
3. தேங்காய் – 1 எண்ணம்
4. பால் – 1/2 கப்
5. சர்க்கரை – 1/2 கிலோ
6. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
7. கிஸ்மிஸ் - 5 எண்ணம்
8. ஏலக்காய்த்தூள் – சிறிது
9. நெய் – சிறிது.
செய்முறை:
1. ஒரு கடாயில் லேசாக நெய் ஊற்றி, ஜவ்வரிசியையும் அவலையும் வறுத்து இரண்டையும் தனித்தனியாக அரைகுறையாக பொடித்துக் கொள்ளுங்கள்.
2. தேங்காயை துருவி, அதனுடன் முந்திரிப்பருப்பு சிறிது சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அதில் உடைத்த ஜவ்வரிசியை முதலில் போட்டு வேகவிட்டு, 5 நிமிடம் கழித்து அவலையும் போட்டு வேகவையுங்கள்.
4. கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு வேகவிடுங்கள்.
5. பிறகு, அரைத்த தேங்காய் - முந்திரிப்பருப்புக் கலவையையும், சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கெட்டியானவுடன் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போட்டு, பொடித்த ஏலமும் போடவும்.
6. இறக்கும் முன் பால் சேர்த்து இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.