பீட்ரூட் பாயாசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 1 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. பால் - 4 கப்
4. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
5. நெய் - சிறிது
6. ஏலக்காய்த்தூள் - சிறிது
செய்முறை:
1. பீட்ரூட்டை நன்கு தோல் சீவிக் கழுவி, அதைத் துண்டு துண்டாக நறுக்கிக் குக்கரில் வேக வைக்கவும்.
2. வேகவைத்த பீட்ரூட்டை மிக்ஸியில் மைபோல் அரைத்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
4. வறுத்து எடுத்த முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூளைக் கொதிக்கும் பீட்ரூட் கலவையில் சேர்க்கவும்.
5. சிறிது நேரம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.