சேமியா பாயசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சேமியா – 1/2 கப்
2. சர்க்கரை – 1/2 கப்
3. பால் – 1/2 கப்
4. நெய் – 2 தேக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு – 6 எண்ணம்
6. உலர் திராட்சை – 12 எண்ணம்
7. ஏலக்காய் – 1 எண்ணம்
8. உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
1. அடி கனமான பாத்திரத்தில், நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் உடைத்த முந்திரிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
2. அதனுடன் உலர் திராட்சையைப் போட்டு, உப்பி வரும் வரை பிரட்டவும். இரண்டையும் தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
3. அதே நெய்யில், சேமியாவைச் சேர்த்து மிதமான நெருப்பில் வறுத்து எடுக்கவும்.
4. பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
5. பின் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியாவைத் தூவினாற் போலச் சேர்த்துக் கலக்கவும்.
6. சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும்.
7. அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும்.
8. மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. மிதமான நெருப்பில் வைத்து, பால் சேர்க்கவும்.
10. கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.