கடலை மாவு பாயசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கிண்ணம்
2. சர்க்கரை - 1 கிண்ணம்
3. பால் - 2 கிண்னம்
4. தேங்காய்ப்பால் - 1/2 கிண்ணம்
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. கிஸ்மிஸ் - 10 எண்ணம்
7. நெய் - 2 மேசைக்கரண்டி
8. ஏலக்காய்தூள் - சிறிதளவு.
செய்முறை:
1. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றிக் காய்ந்தது, அதில் கடலைமாவைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
2. வாசம் வரும் வரை வறுத்தவுடன் அதனைக் கீழே இறக்கி ஆற வைத்து, ஒரு கப் பால் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர், அதை அடுப்பில் வைத்து, மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு கொதி வந்தவுடன் சர்க்கரையைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
4. முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்து அதில் சேர்க்கவும்.
5. ஏலக்காய் பொடி சேர்த்து, கூடுதல் மணத்துக்கு தேவையானால் லேசாக பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போடலாம்.
6. பின்னர் அதனை இறக்கி, அதில் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.