கோதுமை ரவை பாயாசம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை ரவை - 1/2 கிண்ணம்
2. ஜவ்வரிசி - 1/4 கிண்ணம்
3. வெல்லம் (துருவியது) - 1 கிண்ணம்
4. நெய் - 2 தேக்கரண்டி
5. தேங்காய் பால் - 2 கிண்ணம்
6. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
7. முந்திரி - 10 எண்ணம்
8. உலர் திராட்சை - 8 எண்ணம்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், கோதுமை ரவையை சேர்த்து இரண்டு நிமிடம் வரை இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரை எடுத்து, அதில் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்து, அத்துடன் ஜவ்வரிசி மற்றும் 1 1/2 கோப்பை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் வரை விட்டு இறக்கவும்.
3. குக்கரில் வேக வைத்துள்ளதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, 10 நிமிடம் அல்லது சற்று கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
4. அதில் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கிளறி, சில நிமிடங்கள் குறைவான நெருப்பில் வைத்து வேக வைத்து, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
5. ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றிக் காய்ந்த்தும், அதில் உலர்திராட்சை மற்றும் முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
6. வறுத்த முந்திரி, உலர் திராட்சையினைப் பாயாசத்தில் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.