பூரி பாயாசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மைதா - 250 கிராம்
2. ரவை - 50 கிராம்
3. சர்க்கரை - 300 கிராம்
4. பால் - 500 மில்லி
5. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
6. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
7. பாதாம் பருப்பு - 6 எண்ணம்
8. நெய் - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் ரவை இரண்டையும் போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விடக் கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
2. மாவைச் சிறிய பூரிகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
3. தேய்த்த பூரியை ஒரு முள் கரண்டி உதவியுடன் துளைகள் போட்டு வைக்கவும்.
4. தேய்த்த பூரிகளை எண்ணெயில் நன்கு பொறித்து எடுக்கவும்.
5. பொறித்த பூரிகளை நொறுக்கிச் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
6. ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பைப் போட்டு இலேசாக வறுக்கவும்.
7. அதனுடன் பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வரும் வரை காய்ச்சவும்.
8. அதில் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
9. அதனை நன்றாகக் கலந்து விட்டு, அதில் இப்போது அதில் நொறுக்கப்பட்ட பூரிகளைச் சேர்க்கவும்.
10. அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.