அரிசி தேங்காய் பாயாசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
2. பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
3. வெல்லத் துருவல் - 3/4 கோப்பை
4. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
5. நெய் - 1 தேக்கரண்டி
6. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
7. உலர் திராட்சை - 10 எண்ணம்
செய்முறை:
1. அரிசியை 30 நிமிட நேரம் ஊற வைத்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.
2. வெல்லத் துருவலுடன் 1/4 கோப்பை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டவும்.
3. பாத்திரத்தில் ஒரு கப் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறு நெருப்பில் கைவிடாமல் கிளறிவிடவும்.
4. நன்கு கெட்டியாகி வரும் போது, வடிகட்டிய வெல்ல நீரைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டுப் பாயாசப் பதத்தில் இறக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.
6. வறுத்ததைப் பாயாசத்தில் சேர்த்துப் பின்னர் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.