பாசிப்பருப்பு பாயாசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1/4 கோப்பை
2. ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
3. வெல்லம் - 1/4 கோப்பை
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. பால் - 1/2 கோப்பை
6. நெய் - 2 தேக்கரண்டி
7. முந்திரிப் பருப்பு -10 எண்ணம்
8. வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
9. தேங்காய்த் துண்டுகள் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. குக்கரில் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும் .
3. வெல்லக் கரைசலை ஒருமுறை வடிகட்டி, வெல்லப் பாகை எடுத்துக் கொள்ளவும்.
4. வெல்லப் பாகு, வெந்த பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து மீண்டும் ஒருமுறை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.
5. பொடித்த ஏலக்காய் மற்றும் கொதிக்க வைத்த பால் இரண்டையும் சேர்த்துக் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
6. ஒரு கடாயில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்து கொண்டு பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.