கோதுமைப் பாயாசம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை - 1 கோப்பை
2. வெல்லத் தூள் - 1 கோப்பை
3. முந்திரிப் பருப்பு - 8 எண்ணம்
4. உலர்ந்த திராட்சை - 8 எண்ணம்
5. பாதாம் பருப்பு - 5 எண்ணம்
6. நெய் - 2 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1 கோப்பை
8. பால் - 1/2 கோப்பை
9. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. கோதுமையினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
2. கோதுமையின் மீது உள்ள உமி போன்ற தோல் உரிந்து வரும் வரை, அரிசி களைவதுபோல் ஒன்றிரண்டு முறை நீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
3. அதனைக் குக்கரில் போட்டு 3 விசில் வரை வேக விடவும்.
4. ஒரு வாணலியில் வெல்லத் தூளைச் சேர்த்து தண்ணீர் விட்டுப் பாகு போல் காய்ச்சவும்.
5. காய்ச்சிய வெல்லப்பாகினை வடிகட்டி, மீண்டும் அதேக் கடாயில் சேர்த்து, அத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.
6. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுக்கவும்.
7. வறுத்தவற்றை வெல்லப்பாகுக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
8. பால் மற்றும் வேகவிட்ட கோதுமையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிட்டு, பின்னர் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.