கேரள பால் பாயசம்
நெல்லை விவேகநந்தா
தேவையான பொருட்கள்:
1. அரிசி - ஒரு கப்
2. பால் - 4 கப்
3. சர்க்கரை - 2 கப்
4. முந்திரிப் பருப்பு - 12
5. ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
6. நெய் - 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
1.அரிசியை இரண்டு மேஜைக்கரண்டி நெய் விட்டு சிவந்து விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. அதன் பின்னர், நீரில் அந்த அரிசியை நன்றாகக் களைந்து, ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால் என்ற விகிதத்தில் ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.
3. பால்-தண்ணீர் கலவையிலேயே அரிசி நன்கு வெந்து கரைய வேண்டும். இதற்காக, அரிசி நன்கு வெந்தபின், மீதமுள்ள பாலை விட்டு அடி பிடிக்காமல் கிளறிக்கொண்டே வாருங்கள்.
4. பாத்திரத்தில் பால் நன்றாக சுண்டிய பிறகு தீயை முழுவதுமாக குறைத்து, அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்தவுடன் கலவை தளர்ந்துவிடும்.(தேவைப்பட்டால் மீண்டும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து கிளறிவிடலாம்.)
5. கடைசியாக ஏலப்பொடியை சேர்ப்பதோடு, முந்திரியை வறுத்துப் போடவும்.
பின்குறிப்பு : இந்தப் பாயசத்தை குக்கரில் வைத்தும் செய்யலாம். இதற்கு, ஒரு கப் அரிசிக்கு பாலையும், தண்ணீரையும் இரண்டரை கப் சேர்க்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.