பருத்திப் பால் பாயசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பருத்தி விதை - 100 கிராம்
2. பச்சரிசி - 25 கிராம்
3. உளுந்து - 25 கிராம்
4. தேங்காய் - 2 எண்ணம்
5. கருப்பட்டி - 150 கிராம்
6. சுக்கு - சிறிது
7. ஏலக்காய் - 5 எண்ணம்
செய்முறை:
1. பருத்தி விதையை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பச்சரிசி மற்றும் உளுந்தைத் தனியாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
3. ஊற வைத்த உளுந்து மற்றும் பச்சரிசியை மெல்லிதாக அரைத்து எடுக்கவும்.
4. பருத்தி விதையை மிக்சியில் அரைத்து அதிலிருந்து பால் எடுத்து வைக்கவும்.
5. தேங்காயைத் துருவி அதையும் அரைத்துப் பால் எடுக்கவும்.
6. கருப்பட்டியைச் சிறிய துண்டுகளாக்கித் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும்.
7. வாய் அகன்ற பாத்திரத்தில் அரைத்து வைத்த பால் அனைத்தையும் சேர்த்துக் கலக்கவும். கொதிக்க வைத்து வடிகட்டிய கருப்பட்டிச் சாற்றையும் அதில் சேர்த்துக் கலக்கவும்.
8. பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றித் தேவையான தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து கட்டியாகி விடாமல் கிளறிக் கொண்டே நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
பின்குறிப்பு : இந்தப் பருத்திப் பால் பாயசத்தில் கருப்பட்டிக்குப் பதிலாக உருண்டை வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.