ரவை பாயாசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ரவை – 1 கப்
2. காய வைத்த பால் – 3 கப்
3. முந்திரிப்பருப்பு - 6 எண்ணம்
4. கிஸ்மிஸ் - 5 எண்ணம்
5. சாரப்பருப்பு - 3 எண்ணம்
6. பாதாம்பருப்பு – 4 எண்ணம்
7. ஏலக்காய் – 3 எண்ணம்
8. குங்குமப்பூ – சிறிது
9. சர்க்கரை – 2 கப்
10. நெய் – தேவையான அளவு
11. உப்பு – சிறிதளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் ரவையைச் சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் பாலைச் சேர்த்துக் கொதி வந்தவுடன் சர்க்கரை, சிறிது உப்பு, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், முந்திரி, கிஸ்மிஸ், சாரப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை நன்கு சிவக்க வறுத்து பாயசத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.