கேரட் பால் பாயசம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கேரட் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
2. வெல்லம் – 1/4 கப்
3. தேங்காய்ப் பால் – 1 கப்
4. ஏலக்காய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
5. முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
6. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) – 5 எண்ணம்
7. நெய் – 2 தேக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கேரட்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.
4. பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. பின்பு அதில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.