கல்கண்டு சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 400 கிராம்
2. பால் - 2 லிட்டர்
3. கற்கண்டு - 1 கிலோ (பொடி செய்து கொள்ளவும்)
4. நெய் - 150 மில்லி கிராம்
5. முந்திரிப் பருப்பு - 20 எண்ணம்
6. கிஸ்மிஸ்பழம் - 20 எண்ணம்
7. ஏலக்காய் - 5 எண்ணம்
8. தேங்காய் - பாதியளவு.
செய்முறை:
1.பச்சரிசியை அதைப் போல் மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாகக் குழைய விடவும்.
2. அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும்.
3. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும்.
4. இந்த வதக்கல் அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
5. பொடி செய்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும்.
6. கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.