வெண் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 150 கிராம்
2. பாசிப்பருப்பு – 30 கிராம்
3. நெய் - 75 மிலி
4. வறுத்த முந்திரி - 15 எண்ணம்
5. மிளகு - 20 எண்ணம்
6. இஞ்சி - சிறிதளவு
7. கறிவேப்பிலை - சிறிது
8. பெருங்காயத்தூள் - சிறிதளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்கு களையவும்.
2. குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி, சிறிதளவு சீரகம், ஐந்தாறு மிளகுடன் , அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
3. ஒரு பங்கு அரிசி பருப்பு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர் வைக்கவும்.
4. ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பைக் குறைக்கவும்.
5. அதன் பிறகு, 10 நிமிடத்தில் இறக்கி விடவும்.
6. அடுத்து இருப்புச் சட்டியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, சிறிது கடுகு போட்டுப் பொறிந்ததும், தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, சிறிதளவு பெருங்காயம், கறிவேப்பிலை, வறுத்த முந்திரி, பொடித்த மிளகு போட்டுத் தாளித்துச் சேர்த்தால் சுவையான வெண் பொங்கல் தயார்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.